தனிமைப்படுத்தலுக்கு பயணிகளை அழைத்து சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது

0

வவுனியா – ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று ( செவ்வாய்கிழமை ) அதிகாலை விபத்திற்குள்ளாகியதாக தகவல்கள்கள் தெரிவிக்கின்றன .

குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூனநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் வீதிக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியமை குறிப்பிடதக்கது .

இதன்போது பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலைநிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்பபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடதக்கது .

Gallery
Gallery
Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here