தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள உசைன் போல்ட்….

0

ஜமைக்காவின் மின்னல் வேக மனிதன் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டுக்கும் அவருடைய காதலி கேசி பென்னட்டுக்கும் குழந்தை பிறந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜமைக்கா நாட்டின் பிரதமர் Andrew Holness தனது ட்விட்டர் பக்கத்தில் “எங்கள் நாட்டின் ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் – கேசி பென்னட் இருவருக்கும் பெண் குழந்தைப் பிறந்துள்ளது என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால் இது குறித்து உசைனிடமிருந்து அதிகாரப்பூரவ அறிக்கை ஏதும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது காதலி, முதல் குழந்தை மற்றும் தற்போது பிறந்துள்ள இரட்டை பெண் குழந்தைகளுடன் ஒரு அழகான குடும்ப புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், இரட்டையருக்கு செயின்ட் லியோ போல்ட் (Saint Leo Bolt) மற்றும் தண்டர் போல்ட் (Thunder Bolt) என பெயரிட்டுள்ளார்.

உசைன் போல்ட் – கேசி பென்னட் இணையரின் முதல் குழந்தையின் பெயர் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் (Olymoia Lightning Bolt) என்பது குறிப்பிடத்தக்கது.

போல்ட் குடும்பத்தினரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here