இலங்கையில் உதிரிபாகங்களை பொருத்தி தயாரித்துள்ள தண்ணீர் மற்றும் தரையில் ஓடக் கூடிய Lguana X100 4 படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக Sail Lanka Yachting Group நிறுவனம் இந்த படகை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் இது சம்பந்தமான நிகழ்வு நடைபெற்றது.
Sail Lanka Yachting Group நிறுவனத்தின் தலைவர் Pierre Pringiers மற்றும் கௌசால் வீரசிங்க ஆகியோரின் அழைப்பின் பேரில் தாங்கி வசதிகள், கொள்கலன்கள், முனையம், துறைமுக விநியோகம், படகு, கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இந்த வைபவத்தில் கலந்துக்கொண்டார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக இப்படியான படகுகளை அதிகளவில் தயாரித்து, துறையுடன் இணைக்கவும் இலங்கையில் தயாரிக்கப்படும் படகுகளை ஏற்றுமதி செய்து சர்வதேச சந்தையில் வெற்றி பெறுவதும் தமது நோக்கம் என ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.