தடுப்பூசி பெற்ற 7 இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி…. வெளியாகிய அதிர்ச்சி தகவல்

0

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பெற்ற இளைஞர்களில் 7 பேர்களுக்கு இதய வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளா என்பது தொடர்பில் சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் 7 பேரும் வெவ்வேறு மாகாணங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பைசர் நிறுவனத்தின் இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட 14 முதல் 19 வயதுடைய 7 பேர்களுக்கே மார்பில் வலி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மருத்துவமனையை நாடிய நிலையில், முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இளைஞர்களுக்கு இதயத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இளைஞர்களின் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டில் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் பைசர் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 3000 பேர்களில் ஒருவருக்கு இதுபோன்ற இதய வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here