தடுப்பூசி பெற்ற ஜேர்மனியர்களுக்கு ஒரு புதிய சட்டம்…

0

ஜேர்மனியில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி ஊரடங்கு, தனிமைப்படுத்தல் முதலான விதிகளைப் பின்பற்றவேண்டியதில்லை.

அத்துடன், கடைகள் முதலான இடங்களுக்கு செல்லும்போது, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் காட்டவேண்டியதும் இல்லை.

இந்த சட்டத்திற்கு ஜேர்மனியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜேர்மனியில், நேற்றைய நிலவரப்படி 8.6 சதவிகிதம் மக்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டாயிற்று.

30 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள், முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு, தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள் என Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டமானது ஜேர்மனியர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here