தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் உரிமை மக்களிடம் விட்டுவிடவேண்டும்! மருத்துவர் எச்சரிக்கை

0

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் தடுப்பூசியைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

குறிப்பிட்ட வகை தடுப்பூசியை, 18 முதல் 22 வயதுவரையுள்ள இளைஞர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அவ்வகை தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்தவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

30 வயதுக்கு கீழுள்ள ஆண்களுக்கு பைசர் மற்றும் மொடெர்னா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான தடுப்பூசிகள் செலுத்தும் போது அவர்களுக்கு இதய அழற்சி ஏற்படும் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 500 பேர் வரை இந்த பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை தடுப்பூசிகளில் mRNA technology என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

அதாவது, பொதுவாக தடுப்பூசிகள் தயாரிப்பில், குறிப்பிட்ட வைரஸை செயலிழக்கச் செய்து, அல்லது வைரஸின் உடல் பாகம் ஒன்றை பிரித்து அதிலிருந்து தடுப்பூசி தயாரிக்கப்படும்.

ஆனால், இந்த mRNA technology என்னும் தொழில்நுட்பத்தில், குறிப்பிட்ட வைரஸின் மரபுக்குறியீடு (genetic code) மட்டுமே பயன்படுத்தப்படும்,உண்மையான வைரஸ் பயபடுத்தப்படாது.

இந்த வகை தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் mRNA technology என்னும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவரே Dr. Robert Malone என்பவர்.

தற்போது, அவரே இவ்வகை தடுப்பூசிகளை 18 முதல் 22 வயதுவரையுள்ள இளைஞர்கள் போடும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசிகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ள Dr. Robert Malone, ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.

தடுப்பூசி பெற்றுக்கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும் உரிமை மக்களிடம் விட்டுவிடவேண்டும் என்கிறார் Dr. Robert Malone வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here