தடுப்பூசி பெற்றுக்கொண்ட இளம்பெண்ணிற்கு கோமா மூளையில் உருவான கட்டிகள்

0

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து வலிப்பு வந்த ஒரு இளம்பெண், கோமா நிலையில் வைக்கப்படவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.

அத்துடன் மூளையில் உருவான கட்டிகளை அகற்ற, அவருக்கு மூன்று முறை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

லாஸ் வேகாஸைச் சேர்ந்த Emma Burkey 18 வயது இம்மாதம் 1 ஆம் திகதி ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்டார்.

சரியாக ஒரு வாரத்துக்குப் பின் Emmaவுக்கு வலிப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக கலிபோர்னியாவிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Emma, கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதன் பின், Emmaவின் மூளையில் ஏற்பட்டுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றுவதற்காக அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது Emmaவின் நிலைமையில் கொஞ்சம் முன்னேற்றம் காணப்படுவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மூளையில் இரத்தக்கட்டிகள் உருவான ஒன்பதாவது நபர் Emma என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here