தடுப்பூசி பெறுபவர்களுக்கு பியர் இலவசம்! கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்ட நாடு

0

அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமாக மக்களிடையே பரவி காணப்பட்டது.

இந்நிலையில் பல கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவசமாக பியர் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியாகியுள்ளது.

எதிர் வரும் ஜூலை 4 ஆம் திகதி அமெரிக்க சுதந்திர தினத்திற்குள் 70 சதவீத மக்களுக்கு குறைந்தபட்ச ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என்ற இலக்கை அதிபர் பைடன் அரசு முன்னெடுத்துள்ளது.

தற்போது வரை 63 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்த மக்களை ஊக்குவிக்க புதிய முறையை அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான Anheuser-Busch கையாண்டு உள்ளது.

அதன்படி குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பியர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள 4 முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் முன்வந்து உள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தடுப்பூசி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here