தடுப்பூசி பக்கவிளைவுகள் தொடர்பில் அதிகாரப்பூர்வமான தகவல்

0

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி, நோயைத் தடுப்பதில் 79% பயனளித்துள்ளது.

அமெரிக்கா, சிலி, பெரு மேற்கொள்ளப்பட்ட பெரியளவிலான ஆய்வில் இதனை கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தக் கட்டிகளின் அறிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து பல நன்மைகள் அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ள்ளது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரத்தக் கட்டிகள் குறித்து சுயாதீன பாதுகாப்புக் குழு குறிப்பிட்ட ஆய்வை நடத்தியது.

அதில் மூளையில் மிகவும் அரிதான இரத்த உறைவான cerebral venous sinus thrombosis குறித்து சுயாதீன நரம்பியல் நிபுணரின் உதவியுடன் ஆய்வு நடத்தியது என்று அஸ்ட்ராசெனெகா தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 21,583 பங்கேற்பாளர்களிடையே, thrombosis அல்லது thrombosis ஆல் வகைப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் ஆபத்து அதிகம் இல்லை என்று சுயாதீன பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here