தடுப்பூசி செலுத்த மறுக்கும் மக்களுக்கு ஜனாதிபதி மிரட்டல்…

0
FILE PHOTO: Presidential candidate Rodrigo "Digong" Duterte greets supporters during election campaigning in Malabon, Metro Manila in the Philippines April 27, 2016. REUTERS/Erik De Castro/File Photo

அமெரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகள், மக்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் கஞ்சா சிகரெட், தங்கம், கூப்பன் போன்ற பல சலுகைகள் வழங்கின.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தடுப்பூசி போட மறுப்பவர்களை சிறையில் அடைப்பேன் என மிரட்டியுள்ளார்.

1.3 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் மற்றும் 23,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் பிலிப்பைன்ஸ் மிக மோசமான கொரோனா பரவலை எதிர்த்துப் போராடி வருகிறது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகரில் உள்ள பல தடுப்பூசி மையங்களில் மிக குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி பெறுகின்றனர்.

குறித்த அறிக்கையை தொடர்ந்து, தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி Rodrigo Duterte, தடுப்பூசி போடுங்கள் இல்லையெனில் நான் உங்களை சிறையில் அடைப்பேன் என நாட்டு மக்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

ஆனால், பிலிப்பைன்ஸ் சுகாதார அதிகாரிகள் Rodrigo Duterte கருத்துடன் முரண்பட்டுள்ளனர்.

அதாவது, மக்களை கொரோனா தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தினாலும், அது தன்னார்வமானது என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here