தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு விசித்திர விளம்பரத்தை வெளியிட்ட உணவகம்

0

கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் இத்தாலிய உணவுகள் தயாரிக்கும் உணவகம் ஒன்றில் நேரெதிராக தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் உணவளித்து வருகிறது.

மேலும் எதிர்ப்புகளை கண்டுகொள்வதில்லை என கூறியுள்ள உணவக உரிமையாளர்கள், கடந்த ஆண்டு மே மாதம் மாஸ்க் அணியாதவர்களுக்கு மட்டும் உணவகத்தில் அனுமதி அளித்தது.

உணவருந்தும் போது நீங்கள் மாஸ்க் அணிவதில்லை, ஆனால் காத்திருக்கும் நேரம் மட்டும் மாஸ்க் அணிந்து கொள்வதால் என்ன பயன் என கேள்வி எழுப்பியிருந்த அந்த உணவகம்,

மாஸ்க் கட்டாயம் என்பவர்கள் உணவகத்திற்கு வெளியே காத்திருங்கள் என விசித்திரமான விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் மது விற்பனைக்கான உரிமத்தை பறிப்போம் என கலிபோர்னியா நிர்வாகத்தால் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இருப்பினும் அந்த உணவகத்தில் மது பரிமாறப்பட்டே வருகிறது.

நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக மட்டுமே அதிகாரிகள் தரப்பு தற்போது தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் தொடர்பில் கலிபோர்னியா நிர்வாகம் குறித்த உணவகத்திற்கு 152,060 டொலர் அபராதம் விதித்து ஜூன் 17ம் திகதி உத்தரவிட்டது.

ஆனால் ஜூலை 10ம் திகதி குறித்த அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டு இந்த அபராத தொகையை ரத்து செய்ய உதவ வேண்டும் என தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here