தடுப்பூசி செலுத்தப்படாத கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து..

0

ஸ்காட்லாந்தில் கொரோனா தடுப்பூசி போடாத கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்குள் இறக்கும் அபாயமும் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்காட்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட மார்ச் 2020 முதல் சுமார் 1,44,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் தரவுகளை ஆசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

ஆனால் ஆசிரியர்கள் டிசம்பர் 2020 முதல் கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான தரவுகளில் மட்டும் கவனம் செலுத்தியுள்ளனர்.

அந்த காலகட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 77% பேர் தடுப்பூசி போடாதவர்கள்.

அதில் மருத்துவமனை மற்றும் தீவிர கவனிப்பு சிகிச்சை தேவைப்பட்டவர்கள் 90% க்கும் அதிகமானவர்கள் என தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நான்கு வாரங்களுக்குள் குழந்தை பெற்ற பெண்களுக்கு, குழந்தை இறந்து பிறக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் இறப்பது மிக அதிமாக இருந்ததுள்ளது.

ஒவ்வொரு 1,000 பிறப்புகளுக்கும் 22.6 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஸ்காட்லாந்தின் மொத்த விகிதத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

மிகவும் வியக்கத்தக்க வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போட்ட பெண்களில் குழந்தை இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று எக்ஸெட்டரில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தாய்வழி-கரு மருத்துவ நிபுணரான டாக்டர் சாரா ஜே ஸ்டாக் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here