பாரிஸில் உள்ள இரும்பு பெண் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்திற்கு பல முறை வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரம் தங்க நிறமாக மாற உள்ளது.
1907 இல் தங்க நிறத்தில் ஜொலித்தது.
முதலில் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டது.
இப்போது ஒலிம்பிக் போட்டிகளை யொட்டி ஒலிம்பிக் மெடல்களை பிரதிபலிக்கும் வகையில் பழுப்பு மஞ்சள் நிறத்திற்கு மாற உள்ளது.
ஆகவே, ஒலிம்பிக் போட்டிகளின் போது ஈபிள் கோபுரத்தைப் பார்த்தால் அது தங்க நிறத்தில் ஜொலிக்கும்.
அத்துடன், ஈபிள் கோபுரத்தையும் மறு பக்கத்திலிருக்கும் Trocadéroவையும் இணைக்கும் பாலமும் no-car zone ஆக உள்ளது.
மேலும், ஈபிள் கோபுரத்தின் அடியில் உள்ள இடமும் மக்கள் நடந்து செல்லும் வகையில் பாதசாரிகளுக்கான இடமாக மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.