தங்கம் அணியும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கையில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜிபிஎஸ் ஒழுங்கையில் ஈருருளியில் பயணித்த பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழிப்பறியில் ஈடுப்பட்ட இருவரும் பின்னர் தப்பிச்சென்றுள்ளனர்.

நேற்று 14 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த வழிப்பறி தொடர்பான சிசிரிவி பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் காவல்துறையினரால் பெறப்பட்டுள்ளது.

தங்கச் சங்கிலியை பறிகொடுத்த பெண், ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறித்த நேரத்தில் ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் பின்னர் பொலிஸார் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here