தங்கநகைகளுடன் ஓட்டம் பிடித்த புது மனைவி!

0
Mehndi, application of henna as skin decoration in Indian Wedding.

இந்தியாவில் சென்னை தாம்பரத்தின் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்.

இவரது மனைவி அபிநயா, நடராஜனை விட மூன்று வயது மூத்தவர்.

இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்களே நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இருவரும் வேலைக்கு சென்றுவந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சம்பவதினத்தன்று அபிநயா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

நடராஜனும் சிறிய வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது, அபிநயாவை காணவில்லை.

வீட்டில் இருந்த பீரோ கதவு திறந்து கிடந்துள்ளது.

அதில் நடராஜனின் தாயார் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

தொடர்ந்து அபிநயாவின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தாம்பரம் பொலிசாரிடம் புகார் அளிக்க, அவர்கள் விசாரித்து பார்த்ததில், இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அபிநயாவை பெற்றோரை பிரிந்துவிட்டு தனியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

திருமணத்தன்று அபிநயாவின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

பொலிசார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here