தகனம் செய்வதில் பாரிய சிக்கல்: நிதி அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டார் சுமந்திரன்

0

வடக்கு கிழக்கில் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் நேரடியாக குறித்த முறைப்பாட்டினை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்தார்.

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உடல்களை தகனம் செய்வதற்கு போதியளவு வழம் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தமிழ் பேசத் தெரியாத சிறைச்சாலை அதிகாரிகள் விவகாரம் குறித்தும் நிதியமைச்சர் ஆராய வேண்டும் என்றும் சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here