இலங்கையில் இப்போது டெல்டா கொரோனா வைரஷின் உச்சம் இப்போது முடிந்துவிட்டது. அத்துடன் இறப்பு மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இருப்பினும் ஏனைய நாடுகளில் இருக்கும் கடுமையான பிறழ்வுகளால் எதிர்வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் மற்றுமொரு உச்சத்தை எதிர்பார்க்கலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்களால் பொது நடமாட்டம் கடுமையாக குறைந்துவிட்டாலும், நாட்டில் இறப்புகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவப் பேராசிரியரான சுனத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வுகளை முன்னெடுக்காமை மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையை இயக்காமை போன்றவற்றால் சிறப்பு பரப்பிகள் நிறுத்தப்பட்டன.
இலங்கையில் மிகவும் தொற்றக்கூடிய டெல்டா வகையின் உச்சம் முடிந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால் எதிர்வரும் வாரங்களில் உச்சம் ஏற்பட இன்னும் 60% வாய்ப்பு உள்ளது. அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்ற மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.