டெல்டா வகை கொரோனா தொடர்பில் பிரான்ஸ் அறிவியலாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை

0

பிரான்ஸில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் 95 சதவிகிதம் மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிகள் பெருமளவில் போடப்பட்டுவருவதையும் மீறி, டெல்டா வகை கொரோனா வைரஸுடன் தொடர்புடைய நான்காவது அலை ஒன்று வெகு விரைவில் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்கள்.

நாட்டு மக்களில் 90 முதல் 95 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி வழங்குவதன் மூலம் கொள்ளைநோயை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்கிறார்கள் ஷ

பிரான்ஸில் இதுவரை மக்கள்தொகையில் பாதி பேருக்கு மட்டுமே முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

40 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளார்கள்.

பிரான்ஸ் அரசு, ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, அதாவது 35 மில்லியன் பேருக்கு தடுப்பூசி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

ஏற்கனவே பிரான்சில் கொரோனா பாதித்தவர்களில் பாதிபேர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அது 60 சதவிகிதம் அதிக தொற்றும் திறன் கொண்டது என நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

எனவே தடுப்பூசியை மக்களனைவருக்கும் செலுத்துவது பாதிப்பை தடுக்கும் என அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here