டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் குறித்த அறிக்கை நாளை

0

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது.

குறித்த பரிசோதனைகளை இன்று மாலைக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் திரிபின் 3 பிறழ்வுகள் பரவலடைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, S.A 222 V, S.A 701 S மற்றும் S.A 1078 S ஆகிய டெல்டா வைரஸ் திரிபின் 3 பிறழ்வுகள் கண்டறியப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த பிறழ்வுகள் தொடர்பான பரிசோதனைகளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here