பிரிட்டனை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை 19 வயதான ரடுகானு கடந்தாண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
அவரது தோற்றம் பலரையும் ரசிகர்களாக மாற்றியது.
இதனிடையே 35 வயது லாரி ஓட்டுனர் அம்ரித் மகர் என்பவர் ரடுகானுவை கடந்த 8 மாதமாக காதலித்து வந்துள்ளார்.
மேலும் ரடுகானுவை பார்ப்பதற்காக சுமார் 23 கிலோ மீட்டர் நடந்தே வந்த அம்ரித், அவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.
காதல் அட்டை, ரோஜா பூ, விதவிதமான பூங்கொத்து என தினமும் வீட்டு முன்பு வைக்க கிறிஸ்துமஸ் அன்று அனுமதி இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை ரடுகானும், அவரது குடும்பத்தினரும் கண்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் கடுப்பான அம்ரித் வீட்டின் முன்பு அசுத்தம் செய்துள்ளார்.
மேலும் தகாத செயலில் ஈடுபட்டதாகவும் கூறி ரடுகானுவின் தந்தை அந்த இளைஞர் மீது பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞரை லண்டன் பொலிசார் அழைத்து சென்றனர்.
அதேசமயம் இளைஞரின் அத்துமீறல் தொடர்பான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.