டுவிட்டர் தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை… பயனர்கள் சிரமம்

0

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், டுவிட்டர் தளத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

அதனால் பயனர்கள் சிக்கலில் உள்ளனர்.

பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் டுவிட்டர் தளத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாக டுவிட்டர் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஆண்டிராய்டு, ஆப்பிள் டுவிட்டர் ஆப் மூலம் உள்நுழைவதில் பிரச்சினை எழவில்லை.

அதே வேளையில், இணையதளம் மூலம் டுவிட்டர் தளத்தில் லாக்-இன் செய்ய முடியவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த டுவிட்டர் தள திடீர் செயலிழப்புக்கு காரணம் என்ன என்றும் பயனர்கள் கேட்டுள்ளனர். இணைய பக்கத்தை ரீபிரஷ் செய்து பார்த்தும் பயனில்லை.

கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்த பிறகும் டுவிட்டர் தளம் செயல்படவில்லை என்று பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதுகுறித்து டுவிட்டர் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை என பயனர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here