டுபாயில் கோல்டன் விசா பெற்றவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை

0

ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளைக் கொண்டவர்களை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.

அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 10 ஆண்டுகள் அந்நாட்டின் குடிமக்களைப் போல் வாழ முடியும்.

இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் கோல்டன் விசா பெற்றவர்கள் இனி டுபாயில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு பயிற்சி வகுப்புகளில் இணைய வேண்டிய கட்டாயமில்லை.

இதனை அந்நாட்டு சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கோல்டன் விசா பெற்றவர்கள், ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்காமல் தன் சொந்த நாட்டில் எடுக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டுபாயில் சாலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here