டீக்கடை வியாபாரத்தில் இறங்கிய நயன்தாரா!

0

லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா பிரபல டீ கடை ஒன்றில் ரூபாய் 5 கோடி முதலீடு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரை உலகின் நம்பர்-1 நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா, தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளம் நடிகைகளுக்கு இணையாக தற்போதும் அவர் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் சில திரைப்படங்களை விநியோகம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பிரபல தேனீர் கடையான சாய்வாலா என்ற கடையில் ரூபாய் 5 கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து க்யூக் சர்வீஸ் ரெஸ்டாரெண்ட் வகை நிறுவனமான சாய்வாலா கடையில் முதலீடு செய்துள்ளது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here