டி20 தொடரிலிருந்து விலகும் இந்திய நட்சத்திர வீரர்கள்…!

0

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே, 2-0 என ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுவிட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.

ஒரு நாள் தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத இருக்கின்றன.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பெப்ரவரி 16 ஆம் திகதி கொல்கத்தாவில் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணி துணை கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெப்ரவரி 9, 2022 அன்று நடந்த 2 வது ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின் போது ராகுலுக்கு மேல் இடது தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

அதே நேரத்தில் சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட அக்சர் தனது rehabilitation இறுதிக் கட்டத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார்.

அவர்கள் இருவரும் காயத்திலிருந்து மீள்வதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் செல்வார்கள்.

கே.எல்.ராகுல், அக்சர் பட்டேலுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளனர் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிக்கான இந்திய அணி பின்வருமாறு

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், தாக்கூர், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here