டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த வார்னர்!

0

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர் டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றை டி20 போட்டியில், டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 58 பந்துகளில் 92 ஓட்டங்கள் குவித்தார்.

இதில் 3 சிக்ஸர் 12 பவுண்டரிகள் அடங்கும்.

இது அவருக்கு 89வது அரைசதம் ஆகும். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

வார்னர் முதல் இடத்தை பிடித்துள்ள நிலையில் கிறிஸ் கெய்ல்(88) இரண்டாவது இடத்திலும், விராட் கோலி (77) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

டேவிட் வார்னர் 158 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4 சதம், 54 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here