டி-20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

0

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியை SLC அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், இங்கிலாந்து, நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினி, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகள் டி20 உலகக் கோப்பைக்கான அணியை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

நமீபியா, பப்புவா நியூ கினியாவுக்கு இது முதல் டி20 உலகக் கோப்பை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று ஐசிசி டி-20 உலகக் கோப்பைக்கு தசுன் சானக்க தலைமையில் 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2021 டி 20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி:

தசுன் சானக்க – கேப்டன்
தனஞ்சய டி சில்வா – துணை கேப்டன்
குசல் ஜனித் பெரேரா
தினேஷ் சந்திமால்
அவிஷ்கா பெர்னாண்டோ
பானுக ராஜபக்ஷ
சரித் அசலங்கா
வனிந்து ஹசரங்கா
கமிந்து மெண்டிஸ்
சாமிகா கருணாரத்ன
நுவான் பிரதீப்
ஷ்மந்த சமீரா
பிரவீன் ஜெயவிக்ரம
லஹிரு மதுஷங்க
மகீஷ் தீக்ஷனா

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here