டி. ராஜேந்தருக்கு என்ன ஆச்சு? சிம்பு விளக்க அறிக்கை!

0

இயக்குனரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல் நலம் கருதியும் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்

அவர் முழு சுயநினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here