டிக்டொக், வீ செட் தடை நீக்கப்பட்டது ; புதிய ஆணையொன்றில் கையெழுத்திட்டார் பைடன்

0

டிக்டொக் மற்றும் வீ செட் ஆகிய சீன செயலிகளுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த தடைகளை ரத்து செய்யும் நிறைவேற்று ஆணையொன்றில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு விநியோக சங்கிலிகளை சீனாவிலிருந்து உள்ளடக்கிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க மற்றொரு நிறைவேற்று ஆணையொன்றில் (EO) கையெழுத்திட்டார்.

டிக்டொக் மற்றும் வீ செட் மற்றும் பிற எட்டு தகவல் தொடர்பு மற்றும் நிதி தொழில்நுட்ப மென்பொருள் பயன்பாடுகளுடனான பரிவர்த்தனைகளைத் தடை செய்யும் நோக்கிலான மூன்று நிறைவேற்று ஆணைகளை ஜனாதிபதி பைடன் திரும்பப்பெற்றார்.

இந்த அதில், இரண்டு நிறைவேற்று ஆணைகள் வழக்குக்கு உட்பட்டவை என கூறப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேச பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு டிக்டொக் மற்றும் வீ செட் செயலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்தார்.

இதனால் சில சீன செயலிகள் அமெரிக்க அப் ஸ்டோர்களில் இருந்து முடக்கப்பட்டு, அவை அமெரிக்காவில் இயங்குவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்த வார தொடக்கத்தில் பைடன் நிர்வாகம் 59 சீன இராணுவ மற்றும் கண்காணிப்பு நிறுவனங்களை அமெரிக்க முதலீட்டாளர்களையோ அல்லது முதலீடுகளையோ வாங்குவதை தடைசெய்தது, நவம்பர் மாதம் நிறைவேற்று ஆணையில் ட்ரம்பால் குறிவைக்கப்பட்ட 44 சீன நிறுவனங்களின் பட்டியலை விரிவுபடுத்தியது.

மேலும், அமெரிக்க செனட் சபையில் செவ்வாயன்று சீனாவுக்கு எதிராக போட்டியிட தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்ச்சியடைய செய்ய 200 பில்லியன் அமெரிக்க டொலர் சட்டமூலத்திற்கு அனுமதி அளிக்க வாக்களிக்கப்பட்டது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here