டாக்டர் ரிலிஸ் புரளி… கடுப்பான தயாரிப்பாளர்!

0

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று வந்த தகவலில் உண்மை இல்லை என படத்தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இளம் நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. இந்த படத்தை கடந்த மார்ர்ச் 26-ம் தேதியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால் தேர்தல் மற்றும் கொரோனா ஊடரங்கு காரணமாக ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்தனர். பின்னர் மே 13-ம் தேதி ரம்ஜான் தினத்தில் படம் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீசாகவில்லை.

பின்னர் ‘டாக்டர்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் மறுத்தது. இப்படி டாக்டர் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நிலையில் செப்டம்பர் மாதம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. அதேபோன்று வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளியையொட்டி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் புரளி என படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தகவல் வந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. யாரோ திட்டமிட்டு இதேபோன்ற செய்திகளை பரப்பி வருகின்றனர் என படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வரும் வதந்திகளால் படத்தின் தயாரிப்பாளர் டென்ஷாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here