ஜோதிடம், ஜாதகங்கள் மீது ஆர்வம் காட்டும் பிரான்ஸ் இளைஞர்கள்

0

பிரான்ஸ் இளைஞர்கள், கொரோனா காலகட்டத்தில் ஜோதிடம் பக்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொரோனா காலகட்டத்தில் ஜோதிடம் முதலான விடயங்கள் பக்கம் திரும்பியுள்ளார்கள்.

18 முதல் 24 வயதுடைய இளைஞர்களில் சுமார் 70 சதவிகிதம் பேர் ஜோதிடம் முதலான விடயங்களை நம்புகிறார்கள்.

இந்த கொரோனா காலகட்டத்தில் பத்தில் நான்கு பிரெஞ்சு இளைஞர்களும் இளம்பெண்களும் ஜோதிடம் முதலானவற்றை நம்பத்தொடங்கியுள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இது, 2000 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிடும்போது, 10 புள்ளிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் முதல் அலையின்போது அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் பெரிய அளவில் இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அதன் இரண்டாம் அலையின்போது சமூக ஊடகம் வாயிலாக பலரும் ஜோதிடம் முதலான விடயங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதனால், ஜோதிடம், ஜாதகம் பார்ப்பவர்களும் தங்களுக்கு நல்ல வருவாய் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here