ஜேர்மானியர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்த ஸ்பெயின்

0

52 வயதான ஜேர்மானியர் ஒருவர் ஸ்பெயினின் சுற்றுலா தலமான மல்லோர்காவில் சிறுமி ஒருவரை ஆபாசமாக படம் பிடித்ததாக கூறி பத்து வருட நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்த நபர் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல முடியாது என இதனால் தெரிய வந்துள்ளது.

முதலில் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த நபருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன் பின்னர் குறித்த தண்டனையை 10 வருட கால நுழைவுத் தடையாக மாற்றியுள்ளது.

ஜேர்மனியில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட அந்த நபர், தீர்ப்பை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

மல்லோர்கா தலைநகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் கடந்த 2019-ல் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

14 வயதேயான சிறுமியை ஆபாசமாக படம் பிடித்ததை, பாதுகாப்பு ஊழியர்கள் கண்டறிந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஜேர்மானியரை பொலிசார் கைது செய்யும் போது, தாம் ஒரு Youtuber எனவும், சிறுமிகள் மற்றும் பெண்களின் நடவடிக்கைகளை ரகசியமாக பதிவு செய்து அதை காணொளியாக பதிவேற்றம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இரண்டு நாட்கள் அந்த நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு உடனடியாக சொந்த நாட்டுக்கு திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டார்.

தற்போது 10 ஆண்டுகள் நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 4,860 யூரோ அபராதம் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு 1,000 யூரோ இழப்பீடு வழங்கவும் தீர்ப்பாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here