ஜேர்மன் மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! அதிபர் அறிவிப்பு

0

ஜேர்மனியில் “ஆக்க்ஷன் வாரம்” என்ற பெயரில், மக்களுக்கு வரும் வாரம் முழுக்க பல பொது இடங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க சான்சலர் ஏஞ்சலா மேர்க்கெல் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜேர்மனியில் சுமார் 4 மில்லியன் மக்கள் கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 90,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில், ஜேர்மன் மக்கள்தொகையில் 66% பேர் ஒரு டோஸ் மற்றும் 62% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனாலும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று ஏஞ்சலா மேர்க்கெல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை முதல் வரும் வாரம் முழக்க மசூதிகள், கடைகள் மற்றும் கால்பந்து ஆடுகளங்களில் மக்கள் இலவசமாக தடுப்பூசி வழங்கும் கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரத்தை மெர்க்கல்அறிவித்துள்ளார்.

அதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஏஞ்சலா மெர்க்கல் ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் “இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தை கடந்து செல்ல, தடுப்பூசி போடுவதற்கு அதிகமான மக்களை நாம் சமாதானப்படுத்த வேண்டும்” என்று கூறிய அவர், “உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க தடுப்பூசி போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here