ஜேர்மனி மருத்துவமனையில் அடித்துக் கொல்லப்பட்ட நோயாளிகள்…!

0

ஜேர்மனி தலைநகர் பெர்லினின் கிழக்கு நகரமான போட்ஸ்டாமில் உள்ள மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை பிற்பகுதியில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் ஓபர்லின் சுகாதார மையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் சடலமாக நான்கு நபர்களையும், பலத்த காயமடைந்த ஐந்தாவது நபரையும் மீட்டதாகவும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஐவரும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளதாகவும், அதனாலையே மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர் தொடர்பிலான தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அந்த சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எனவும், கைதான பெண் அந்த சுகாதார மையத்தின் ஒரு ஊழியர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here