ஜேர்மனியில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றுக்களால், கடந்த ஆண்டிலிருந்ததைவிட நிலைமை மோசமாகும் என எச்சரித்துள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள்,
புதிதாக தொற்றுக்கள் அதிகரிப்பதைத் தடுக்க உதவும் வகையில், ஈஸ்டர் பண்டிகையின்போது வீடுகளுக்குள் இருக்குமாறு மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahnம், மக்கள் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
சுகாதார விதிகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்றுமாறும், பெரிய அளவிலான கூட்டங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜேர்மனியில் கொரோனாவின் மூன்றாவது அலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.