ஜேர்மனி அறிவித்துள்ள புதிய திட்டம்

0

ஜேர்மன் மக்கள் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் ஜேர்மன் நிதியமைச்சரான Christian Lindner அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், சிறுபிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியையும் சற்று அதிகரிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

நேரடியாக வரிகளைக் குறைப்பதற்கு பதிலாக, வரி செலுத்துவதற்கான வருமான வரம்பு உயர்த்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

அதாவது, இதுவரை 10,347 யூரோக்கள் வரை ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்தவேண்டாம்.

மேலும் இனி, 10,632 யூரோக்கள் ஊதியம் பெறுபவர்கள் வரை வருமான வரி செலுத்தவேண்டாம்.

2024 இல் இந்த விதியில் மேலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டு, 10,932 யூரோக்கள் ஊதியம் பெறுபவர்கள் வரை வருமான வரி செலுத்தவேண்டாம் என்றும் விதிமாற்றம் செய்யப்பட உள்ளது.

அத்துடன், சிறுபிள்ளைகளுக்கான நிதி உதவியும், இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கொண்ட குடும்பத்திலுள்ள முதல் இரண்டு பிள்ளைகளுக்கு, 8 யூரோக்கள் உயர்த்தப்பட்டு மாதம் ஒன்றிற்கு 227 யூரோக்களாக வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here