ஜேர்மனில் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

0

ஜேர்மனியில் பொது போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹாம்பர்கர் வெர்கெர்ஸ்வெர்பண்ட் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.

இந்த வாய்ப்பு செம்டெம்பர் 13 திகதி முதல் 26 வரை நடைமுறையில் இருக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு பயணி குறித்த நிறுவனத்தில் பதிவு செய்து சந்தா பெற்றிருந்தால் மேலதிகமாக இரண்டு வாரங்கள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உள்ளுர் போக்குவரத்து சேவைகளை மட்டும் பயன்டுத்த முடியும்.

நீண்ட தூர ரயில் போகுவரத்து சேவைகளான ICE, ECE, IC, EC ஆகிய சேவைகளுக்காக இந்த டிக்கெட்டினை பயன்படுத்த முடியாது.

யாரின் பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அவரே இரு வாரங்களுக்கு செலவின்றி பயணிக்க அனுமிக்கபடுவர்.

இலவச டிக்கெட்டினை பெற இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான உறுதிப்படுத்தல் தகவல்கள் உங்கள் மின்னஞ்சலக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை உங்கள் ஸ்மார்ட் கைபேசிகளில் தறவிறக்கம் செய்வதன் மூலம் இலவச பயணத்தை உறுதிப்படுத்த முடியும்.

பொது போக்குவரத்தில் பயன்படுத்தும் முழு நேர அட்டைகள், பகுதி நேர அட்டைகள், சிரேஷ்ட குடிமக்களின் அட்டைகள், பயிற்சி / மாணவர் அட்டைகள், பள்ளி மாணவர்களுக்கான நேர அட்டைகள், பயிற்சியாளர்களுக்கு போனஸ் டிக்கெட், செமஸ்டர் டிக்கெட்களை வைத்திருந்போர், இருவார இலவச சேவைக்கு பதிவு செய்ய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here