ஜேர்மனிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அரசு..!

0

ஜேர்மனியில் எரிவாயு விநியோக அவசரநிலைக்கு சாத்தியமாகும் என அராங்கம் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து வரும் எரிவாயு நிறுத்தப்படும் அல்லது தடைப்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தங்களிடமிருந்து எரிவாயு வாங்கும் நாடுகள் இனி அதற்கு ரூபிளில் பணம் செலுத்த வேண்டும்.

புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த ரஷ்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஜேர்மனி இவ்வாறு அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த கோரிக்கையை ஜேர்மனி உட்பட ஜி7 நாடுகள் நிராகரித்துள்ளன மற்றும் எரிவாயு விநியோகம் தடைப்படும் என அச்சமடைந்துள்ளன.

ஜேர்மனியின் தற்போதைய எரிவாயு அவசரத் திட்டத்தின் கீழ், முன்கூட்டிய எச்சரிக்கை மூன்று நிலைகளில் முதன்மையானது.

ஒவ்வொரு கிலோவாட் மணிநேரமும் கணக்கிடப்படும் என்று கூறிய பொருளாதார அமைச்சர் Robert Habeck, நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here