ஜேர்மனியை தாக்கவுள்ள புயல்… வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை!

0

வடக்கு மற்றும் கிழக்கு ஜேர்மனியை புயலும் மழையும் தாக்க இருப்பதாக ஜேர்மனி வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இன்று காலை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.

பெர்லின், Brandenburg, Schleswig-Holstein மற்றும் Mecklenburg Western-Pomerania ஆகிய கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில், அடுத்த 12 மணி நேரத்தில் 80 மில்லிமீற்றர் அளவுக்கு பெருமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியத்திலிருந்து, நாளை இரவுக்குள் இடியுடன் கூடிய மழையும் மின்னலும் இருக்கலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் ஆயத்தமாகவும், அவதானமாகவும் இருக்குமாறு வானிலை ஆராய்ச்சி மையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here