ஜேர்மனியை அச்சுறுத்தும் வெள்ளம்….. அச்சத்தில் மக்கள்

0

ஐரோப்பாவில் கன மழை பல்வேறு நாடுகளில் பெய்து வருகின்றது.

இந்நிலையில், ஜேர்மனி வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 106 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயகிள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Bonn நகரத்துக்கு அருகிலுள்ள Euskirchen பகுதியில் கட்டப்பட்டுள்ள அணை ஒன்றில் விரிசல்கள் ஏற்பட்டதால் அச்சம் எழுந்துள்ளது.

அப்பகுதியில் வாழும் 4,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததையடுத்து, கூடியளவான தண்ணீர் அணையை வந்தடைந்துள்ளது.

அதனால், எந்த நேரத்திலும் அணை உடையலாம் என பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

அந்த அணை, உபரி நீரை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள், கட்டிடங்களின் பாகங்கள் தண்ணீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த துவாரங்களை அடைந்து காணப்படுகின்றது.

தண்ணீர் அதிகமாகி அணையின் முன்பக்கத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பதற்றத்தில் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here