ஜேர்மனியில் முக்கிய பொருளை வாங்கி குவிக்கும் மக்கள்!

0

ஜேர்மனியில் எதிர்வரும் குளிர்காலத்தில் எரிசக்தி நெருக்கடி ஏற்படவுள்ளது.

இதனால் மின்சார ஹீட்டர்களின் விற்பனை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஜேர்மனியில் சுமார் 600,000 ஹீட்டர்கள் விற்கப்பட்டுள்ளன.

இதனை சந்தை ஆராய்ச்சி நிறுவனமான GFK தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 35% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மின்சார ஹீட்டர்களின் விற்பனையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கையில் இருக்கும் ஹீட்டர்கள் தீர்ந்துவிட்டன என்று பேர்லினில் உள்ள ஈசன் டோரிங் எலக்ட்ரிக்கல் கடையின் உரிமையாளர் ஃபிராங்க் டோரிங் தெரிவித்துள்ளனர்.

மேலும் காஸ்ப்ரோமின் எரிவாயு விநியோகத்தை மீண்டும் மீண்டும் குறைத்துள்ளது.

ரஷ்யா ஐரோப்பாவின் மீது அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்கு விநியோகங்களை நிறுத்தக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here