ஜேர்மனியில், 24 மணித்தியாலத்தில் 200,000க்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 203,136.
அத்துடன், 188 பேர் கொரோனா தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஒரு வாரத்திற்கு முன் தினசரி கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை 133,536 ஆக இருந்தது.
ஏழு நாட்களில், 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்ற எண்ணிக்கை முதன்முறையாக 1000ஐத் தாண்டிவிட்டது.
புதனன்று 638.8ஆக இருந்த இந்த எண்ணிக்கை, வியாழனன்று 1017.4 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.