ஜேர்மனியில் மருந்தகங்கங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும்!

0

ஜேர்மனியில் மருந்தகங்கங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும்!

ஜேர்மனி பெப்ரவரி இறுதிக்குள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டங்களில் செயல்பட்டு வருகின்றது.

சில ஐரோப்பிய அண்டை நாடுகளைப் போலல்லாமல், ஜேர்மனியில் இன்னும் பல தொற்றுநோய் கட்டுப்பாடுகள் உள்ளன.

தடுப்பூசி போடப்படாதவர்கள் உணவகங்கள், பொது இடங்கள் மற்றும் சில கடைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஜேர்மனியில் கட்டுப்பாடுகளை நீக்குவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 16 ஆம் திகதி அன்று கூட்டாட்சி மற்றும் மாநில அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த நடவடிக்கைகள் விவாதிக்கப்படும்.

Omicron மாறுபாடு காரணமாக சமீபத்திய வாரங்களில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்று எண்ணிக்கைகள் ஜேர்மனியில் கூர்மையாக அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், ஜேர்மனியில் உள்ள மருந்தகங்கங்கள் பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் தடுப்பூசிகளை வழங்கத் தொடங்க உள்ளனர்.

பாராளுமன்றம் விதிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், மருந்தாளர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களும் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க முடியும்.

ஜேர்மன் மக்கள்தொகையில் சுமார் 74.4% பேர் COVID-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் 54.3% பேர் கூடுதலாக பூஸ்டர் ஷாட் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here