ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

0

ஜேர்மனியில் Heidelberg நகரத்தில் உள்ள Neuenheimer Feld பகுதியின் பல்கலைக்கழக செலக்சரர் அரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் தெரிவிக்கையில், தனிநபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், அவர் பெரிய துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் உயிரிழந்ததாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது தெரியவில்லை.

மீட்புப் பணியாளர்கள் மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவதனால், அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here