டுயிஸ்பர்க்கின் வடக்கு ஹாம்போர்ன் பகுதியில் ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் சைக்கிள் கும்பல் மற்றும் அதிகாரிகள் பெயரிடாத துருக்கிய-அரபு குற்றக் கும்பலுக்கிடையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
அவசர அழைப்புகள் கிடைத்த நான்கு நிமிடங்களில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவத்தைத் தூண்டியது என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் சம்பவ இடத்தில் 9 மிமீ கைத்துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்ட குறைந்தது 19 ஷெல் உறைகளை மீட்டதாக காவல்துறை கூறுகிறது.
நான்கு பேர் காயமடைந்தனர், இருவர் படுகாயமடைந்தனர்.
பதினைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட படை அதிகாரிகள் வருவதற்குள் தேடப்படும் நபர்களும் அவர்களது குடும்பத்தினரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இரவு முழுவதும் பொலிஸார் வீடுகளில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ரெயுல்,
குறிப்பாக இங்கு ரூர் பள்ளத்தாக்கில் மக்களை பெரிதும் அச்சுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கொண்ட கொலைவெறி பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவின் மாநிலத் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.