ஜேர்மனியில் ஜூன் 1 ஆம் திகதி முதல், COVID-19 காரணமாக விதிக்கப்பட்ட பல பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக ஜேர்மன் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் அறிவித்துள்ளார்.
மேலும் “ஆகஸ்ட் இறுதி வரை, நுழைவுக்கான 3G விதியை நாங்கள் நிறுத்தி வைப்போம்,” என்று ஜேர்மன் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் கூறினார்.
ஜேர்மனியின் 3G விதிப்படி, பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு செல்லுபடியாகும் தடுப்பூசி சான்றிதழ், மீட்பு அல்லது சோதனைச் சான்றிதழை வழங்க வேண்டும்.
நாட்டில் COVID-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், குறைந்தபட்சம் கோடை காலத்திற்காவது இந்த விதி நீக்கப்படும் என்று SchengenVisaInfo.com தெரிவித்துள்ளது.
“வைரஸ் மாறுபாடு பகுதி” (virus variant areas) என்று அழைக்கப்படும் நாடுகளில் இருந்து வருபவர்கள்.
தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல், வருகையின் போது 14 நாள் தனிமைப்படுத்தலில் நுழைவது போன்ற பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்கும்.
தற்போது, ஜேர்மன் பட்டியலில் எந்த நாடுகளும் வைரஸ் மாறுபாடு பகுதியாக கருதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.