ஜேர்மனியில் நடைமுறைப்படுத்தும் புதிய சட்டத் திட்டம்..!

0

ஜேர்மனியில் ஜனவரி 1, 2022 முதல் ஆண் கோழிக்குஞ்சுகளை கொல்வதை தடை செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் உலகிலேயே ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதை சட்டபடி தடைசெய்யும் முதல் நாடாக ஜேர்மனி உருவெடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜேர்மனியில் ஆண் கோழிக்குஞ்சுகளை கொல்ல தடை விதிக்கப்படும் என்று ஜேர்மன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள பாரம்பரிய கோழிக்குஞ்சு வளர்ப்பு முறை நெறிமுறையற்றது என விமர்சித்துள்ளனர்.

இந்த மசோதாவை முன்மொழிந்த விவசாய அமைச்சர் Julia Klöckner, ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவது அறத்தின் படி ஏற்றுக்ககொள்ள முடியாத ஒன்று என கூறியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள கோழி பண்ணைகள் பாரம்பரியமாக ஆண் கோழிக்குஞ்சுகளை குஞ்சு பொரித்த சிறிது நேரத்தில் கொன்றுவிடுவது வழக்கம்.

ஏனெனில் ஆண் குஞ்சுகளால் முட்டையிட முடியாது மற்றும் இறைச்சி உற்பத்திக்கு ஏற்றவை அல்ல.

அதாவது அவற்றை வளர்ப்பது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என்பதால் அவை கொல்லப்படுகின்றன.

ஜேர்மனியில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 மில்லியன் ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here