ஜேர்மனியின் Baden-Württemberg மாநிலத்தில் உள்ள கிர்ச்ஹெய்மில் ஸ்டட்கார்ட்டில் இருந்து தென்கிழக்கே 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள Kirchheim அண்டர் டெக் என்ற இடத்தில் உள்ள ஷாப்பிங் சென்டரில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
குறித்த பகுதியின் வழியே சென்றவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்டதில் பயந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்த 58 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் ஷாப்பிங் சென்டரின் நுழைவாயிலுக்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காரில் மற்றோரு ஆண் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்தை விசாரணை மேற்கொண்டதில் காரில் இறந்து கிடந்த நபர் தான் அப்பெண்ணை சுட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, காரில் உயிரிழந்த நபர் குறித்தும் அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது பொலிஸாருக்கு அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்தன.
உயிரிழந்த அந்த நபர், Baden-Württemberg மாநில குற்றப்பிரிவு பொலிஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர்.
அவர் தன்னை விட்டுப் பிரிந்திருந்த தனது மனைவியை முதலில் சுட்டு கொன்றுள்ளார்.
பின்னர் தனது சேவை துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்போதைய விசாரணையின் படி, இந்த சம்பவத்தின் நோக்கம் தனிப்பட்ட அல்லது குடும்பப் பிரச்சினையாக இருக்கும் என நம்பப்படுகிறது.