ஜேர்மனியில் திடீர் பருவமாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனை

0

ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் மாதம், மக்கள் அனைவரும் கோடையை எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில், பிரித்தானியா, சுவிட்சர்லாந்து முதலான பல நாடுகளில் மீண்டும் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ளது.

ஜேர்மனியில், இந்த திடீர் பருவமாற்றத்தால் விபத்துக்கள் முதல் போக்குவரத்து நெரிசல் வரை பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜேர்மன் சாலைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

Thuringiaவில் பல சாலைகளில் பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

விபத்து காரணமாக சில சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Lower Saxonyயில் கார் ஒன்று சாலையிலிருந்து வழுக்கி மரத்தின் மீது மோதியதில் படுகாயமடைந்த சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது முதலான பல விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

Hesse பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்று மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்கு பத்துக்கும் அதிகமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here