ஜேர்மனியில் தடை செய்யப்பட்ட ரஷ்ய சேனல்…!

0

ரஷ்யா சேனலான RT-யின் ஜேர்மன் மொழி சேனலை நாட்டில் ஒளிபரப்ப ஜேர்மன் ஊடக ஒழுங்குமுறை ஆணையமான MABB தடை விதித்துள்ளது.

அது தொடர்பாக மத்திய ஏஜென்சியான ZAK அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

RT DE சேனலை ஜேர்மனியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது.

ஏனெனில் ஊடகச் சட்டத்தின்படி தேவையான அங்கீகாரம் அதற்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 17 அன்று, ஜேர்மனியில் RT DE செய்திச் சேனலைத் தொடங்குவதாக RT அறிவித்த பிறகு, ஜேர்மன் ஊடக ஒழுங்குமுறை ஆணையமான MABB, RT DE புரொடக்ஷன்ஸ் GmbH மீதான விசாரணையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜேர்மன் ஒழுங்குமுறையின் தடையை எதிர்த்து RT DE புரொடக்ஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக RT துணை ஆசிரியர் அன்னா பெல்கினா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here