ஜேர்மனியில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஜேர்மனி அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் தடுப்பூசி செலு த்தாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் chief of staff எனும் பொறுப்பிலிருக்கும் அலுவலரான Helge Braun என்பவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ள Braun, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டுத் திடல்கள் ஆகிய இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெற்றுக்கொள்ளுவது கடுமையான தொற்றிலிருந்து பாதுகாக்க இன்றியமையானது என்பதாலும், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும் என்பதாலும் மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என Braun வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here